sampanthan 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்கள் நலன் கருதிச் செயற்படுங்கள்! – அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து

Share

“நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது இலங்கை அரசு தனது சுயலாப அரசியலைக் கைவிட்டு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சியை வரவேற்பதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“தமிழக முதலமைச்சரின் இந்த நல்ல முயற்சியை வரவேற்கின்றோம். அதேபோல் இந்திய மத்திய அரசும் இக்கட்டான நெருக்கடி நிலைமையில் இலங்கைக்கு உதவவேண்டும். முழு அளவிலான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கவேண்டும்.

அதேவேளை, இந்திய அரசின் வேண்டுகோள்கள் தொடர்பில் இலங்கை அரசு கவனம் செலுத்தவேண்டும். நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது இலங்கை அரசு தனது சுயலாப அரசியலைக் கைவிட்டு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.

தமிழகத்தினதும், இந்தியாவினதும் முழுமையான பங்களிப்பு தமிழ் மக்கள் நலன் சார்ந்த விடயங்களிலும், இலங்கையின் தேசிய மட்டத்திலும் தொடரவேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 15
உலகம்செய்திகள்

டொனால்ட் டிரம்ப் வருகைக்கு முன்னதாக ஈரான் – சீனா அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: மத்திய கிழக்கில் சீனாவின் முக்கியத்துவம் அதிகரிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இப்பிராந்தியத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஈரான்...

Untitled 14
செய்திகள்உலகம்

லண்டனில் யூத சமூகத்தினருக்காகப் பிரத்யேக பொலிஸ் பிரிவு: பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவு

லண்டனில் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைத்...

Untitled 13
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம்: காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்கத் தயாராகும் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களைக் கைப்பற்றியுள்ள...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் வசிக்கும் மாலத்தீவினரின் விசா சிக்கல்கள்: நிரந்தரத் தீர்வு குறித்து ஜனாதிபதி முய்ஸு உறுதி

இலங்கைக்கு உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு, கொழும்பில் வசிக்கும்...