இலங்கை கிரிக்கெட் அணி வீரர் வைத்தியசாலையில்
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சாமிக குணசேகர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபை இதனை தெரிவித்துள்ளது.
இலங்கை – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது தலைக்கவசத்தில் பந்து தாக்கியதால் சாமிக குணசேகர போட்டியிலிருந்து வெளியேறினார்.
இந்த சம்பவத்தின் பின்னர் சாமிக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாமிக குணசேகரவிற்கு பதிலாக கசுன் ராஜித அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.