vacancy 5678758
இலங்கைசெய்திகள்

பணிக்கு செல்லாத ஊழியர்களுக்கும் சம்பளம் !

Share

பணிக்கு செல்லாத ஊழியர்களுக்கும் சம்பளம் !

பணிக்கு செல்லாத அரச ஊழியர்கள் பலர் சம்பளம் பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மாத காலமாக ஒரு நாள் கூட பணிக்கு செல்லாத பெருமளவு அரச ஊழியர்கள் மற்றும் ஒரு வருட காலத்துக்கும் மேல் ஒருநாள் கூட பாடசாலைக்கு செல்லாத அதிபர் ஆசிரியர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், உயர் அதிகாரிகள் சில மணிநேரம் மாத்திரமே கடமைக்கு வந்து போக்குவரத்து மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகளை பெறுகின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் அலுவலகங்களில் 2, 3 மணித்தியாலங்கள் மாத்திரமே கடமையில் இருந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலை காரணமாக பல தனியார் நிறுவனங்கள் தமது பணியாளர்களின் கடமை நேரத்துக்கு மாத்திரமே ஊதியம் வழங்குகின்றது.

மேலும் சில நிறுவனங்கள் எவ்வித கொடுப்பனவும் வழங்காது அடிப்படை ஊதியத்தை வழங்கி வருகின்றன எனவும் பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 5
செய்திகள்இலங்கை

இலங்கை – நேபாளம் இடையே புதிய விசா விலக்கு ஒப்பந்தம்: அமைச்சரவை அனுமதி!

இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்,...

22 8
செய்திகள்இலங்கை

பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

20 9
உலகம்செய்திகள்

டொராண்டோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு: கனடா காவல்துறையினர் தீவிர விசாரணை

கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தை இலக்கு வைத்து, இன்று (மார்ச் 10)...