நல்லூர் கந்தனை வழிபட்ட சஜித் (படங்கள்)

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று காலை வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றார்.

Sajith 01

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பிறந்த தினமான இன்று காலை காலை 10 மணியளவில் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வருகையால் நல்லூர் ஆலய சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version