ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் எதிராகக் கொண்டுவரப்படவுள்ள அவநம்பிக்கைப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை குறித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு நாளை பேச்சு நடத்தவுள்ளது.
குறித்த பிரேரணைகளை, சபாநாயகரிடம் கையளிக்கும் காலம் தொடர்பில், இந்தக் கூட்டத்தில் முக்கியமாகக் கலந்துரையாடப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை, அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அதனை ஒரு வாரத்தால் பிற்போடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
சமகால பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்துடன், நாளைமறுதினம் நடைபெறவுள்ள பேச்சுக்கு அது தாக்கம் செலுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் வழங்கிய அறிவுறுத்தலைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
#SriLankaNews