குழப்பத்தை உண்டாக்கும் அரசாங்கம் – சஜித் கடும் கண்டனம்
உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதன் மூலம் நாட்டு மக்களின் வைப்புத் தொகைக்கும் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் என்ன நடக்கிறது என்பது குறித்து இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை எனவே மக்கள் மிகுந்த குழப்ப நிலைக்கு ஆளாகியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடன் மறுசீரமைப்பு மூலம் என்ன நடக்கும் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவது ஜனாதிபதியின் கடமை எனவும், மக்களுக்கு தகவல்களை மறைப்பதன் மூலம் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படலாம்.
அரசாங்கம் ஏதேனும் தீர்மானம் எடுத்தால் அது தொடர்பில் மக்களுக்கு அறிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.
ஆனாலும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு முறையான விளக்கமளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தவுடன் வீட்டு வருமானம் மற்றும் செலவு கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
ஆனால் இதுவரை அது மேற்கொள்ளப்படவில்லை.
முறையான கணக்கெடுப்பை நடத்தாமல் அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் என தெரிவித்தார்.
இதனால் இன்று இத்திட்டம் நாட்டிற்கு பெரும் தலையிடியாக மாறிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Leave a comment