சஜித்
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச கைப்பொம்மையாக சியம்பலாப்பிட்டிய! – சாடுகின்றார் சஜித்

Share

” பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறிவிட்டார்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் சீற்றத்தை வெளிப்படுத்தினார்.

பிரதி சபாநாயகர் தேர்வு குறித்து சபையில் கருத்து வெளியிட்ட அவர், இத்தேர்தல்மூலம் பலரின் அரசியல் நாடகம் அம்பலத்துக்கு வந்துவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனினும், எதிரணியில் உள்ளவர்கள் மக்கள் பக்கம் நிற்பார்கள். அரசியல் நடிகர்களை இணங்காண்பதற்கு இத்தேர்தல் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துவிட்டது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

அத்துடன், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய என்பவரை எதிரணி வேட்பாளராக கருதமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல சபையில் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...