கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஶ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (26) காலை விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, புத்தரின் புனித தந்தத்தை வழிபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
சங்கைக்குரிய மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் நிகழ்த்தி எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆசீர்வதித்தனர்.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் வரலாற்றுச் சிறப்புமிக்க நாத தேவாலயத்துக்குச் சென்று ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
அடக்குமுறை மிக்க கொடுங்கோல் அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த ஐக்கிய சக்தி பாத யாத்திரை கண்டியில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இதற்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தச் சமய நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
#SriLankaNews
Leave a comment