rtjy 229 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

உரிமைக்காக போராடிய தமிழர்களை சிறையிலடைத்தது சிங்கள பேரினவாதம்

Share

உரிமைக்காக போராடிய தமிழர்களை சிறையிலடைத்தது சிங்கள பேரினவாதம்

பயங்கரவாதம் என்ற போர்வைக்குள் உரிமைக்காக போராடிய தமிழர்களை அடக்கியும் கொன்றும் வலிந்து காணாமல் ஆக்கியும் ஆண்டுக் கணக்காக அப்பாவிகளை சிறைகளில் அடைத்தும் வேடிக்கை பார்த்தது சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதம் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்றயதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் அவர் கூறுகையில், 2009 வரை தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய பயங்கரவாத தடைச்சட்டம் 44 ஆண்டுகளை கடக்கும் நேரத்தில் அதன் வடிவத்தை சர்வதேச அழுத்தங்களின் பிரகாரம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயரில் எதிர்ப்புக்கள் மத்தியில் மீண்டும் செப்டம்பர் 15 வர்த்தமானியில் பிரசுரமாகியுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் உள்ளடக்கம் நாட்டில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த இருந்தாலும் உத்தேச பயங்கவாத எதிர்ப்புச் சட்டம் நிறைவேறினால் பெரியளவில் தமிழர்களே பாதிப்பைச் சந்திக்கவுள்ளனர்.

விடுதலைப் போராட்டம் சார்பான நினைவேந்தல்கள் மற்றும் தமிழர்களின் இருப்பை அரச இயந்திரம் அபகரிக்கும் போது அரசாங்கத்தற்கு எதிராக போராடும் மக்களின் ஜனநாயக போராட்டங்கள் புதிய சட்டத்தில் பயங்கரவாதமாக பார்கப்படுகின்றது.

அத்துடன் இதற்கான தண்டனைகளும் மிக கடினமானதாக அமைந்துள்ளன.

இவ்வாறான நிலை எதிர்காலத்தில் ஜனநாயகப் போராட்டங்களை முற்றாக அடக்கும் செயற்பாடாகவே அமையும் அத்துடன் சமூக ஊடகங்கள் பாரிய அளவில் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலை ஏற்பட்டால் அரச அடக்குமுறைகள் உடனுக்குடன் முழுமையாக வெளிவராது தடுக்கப்படும்.

மொத்தத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நிறைவேறினால் தமிழர்களுக்கு மீண்டு ஒரு இனவழிப்புக்கு வழி திறக்கும் தடுத்து நிறுத்த ஒன்றிணைவோம் – என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...