தென்னிந்திய தொலைக்காட்சியில் நடுவர்களை கண்கலங்க வைத்த இலங்கை தமிழ் சிறுமி!
இலங்கைசினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

தென்னிந்திய தொலைக்காட்சியில் நடுவர்களை கண்கலங்க வைத்த இலங்கை தமிழ் சிறுமி!

Share

தென்னிந்திய தொலைக்காட்சியில் நடுவர்களை கண்கலங்க வைத்த இலங்கை தமிழ் சிறுமி!

பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ் இல் ஒளிபரப்பாகும் “சரிகமப“ என்ற நிகழ்ச்சியில் இலங்கையின் மலையகத்தில் இருந்து அசானி பங்குபற்றியுள்ளார்.

கண்டி, புஸ்ஸல்லாவையை சேர்ந்த கனகராஜ் அசானி என்ற சிறுமி இன்று ஞாயிற்றுக்கிழமை (06-08-2023) இடம்பெற்ற சரிகமப நிழ்ச்சியில் பாடினார்.

அவரது பாடலை கேட்ட நடுவர்கள் கண்கலங்கியதுடன், அவரை தொடர்ந்து இரு வாரங்களுக்கு சரிகமப நிகழ்ச்சியில் பாடுவதற்கும் அனுமதி அளித்துள்ளனர்.

‘ராசாவே உன்ன நம்பி ஒரு ரோசாப்பூ’ என்ற பாடலையே அசானி இன்று பாடியதுடன், எந்தவித இசை பயிற்சியும் முறையாக கற்றுக்கொண்டும் அவர் பாடவில்லை.

தமது தன்னம்பிக்கையையே இவர் பாடலாக வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிழ்ச்சியில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அசானி,

வானொலியில் ஒளிபரப்பாகிய பாடல்களை சிறு வயது முதல் கேட்டு மாத்திரம் பாட கற்றுக்கொண்டதாகவும் தமது தாய் தந்தையரே பாடுவதற்கு ஊக்குவித்தாகவும் கூறினார்.

தமது மக்களுக்காகவும் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றவுமே இந்த நிழ்ச்சியில் கடல் கடந்து வந்து பாட ஆசைப்பட்டதாகவும் அசானி கண்ணீருடன் கூறினார்.

அசானியின் திறமையை கண்டு நிகழ்ச்சியை பார்வையிட வந்த அனைவரும் கண்கலங்கியதுடன் மிகுந்த வரவேற்பையும் அளித்தனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 2
செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபையில் அதிரடி வேலைநிறுத்தம்: 6 மணிநேர போராட்டத்தால் மின் விநியோகத்தில் பதற்றம்!

இலங்கை மின்சார சபையை (CEB) கலைத்து, அதனைச் சட்டவிரோதமான முறையில் மறுசீரமைக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும்...

10 2
செய்திகள்அரசியல்இலங்கை

புலனாய்வு அதிகாரிகளை வேட்டையாடுவது ஆபத்தானது: சுரேஷ் சலே கைது குறித்து அலி சப்ரி கடும் எச்சரிக்கை!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

09 2
செய்திகள்அரசியல்இலங்கை

சுரேஷ் சலே கைது: ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை – பொலிஸ் விளக்கம்

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

08 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: மைலிட்டி முகாம் இராணுவச் சிப்பாய் அதிரடிக் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் நேற்று (25) காலை பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற...