எஸ்.பி. திஸாநாயக்கவும் அவுட்??

SP Thissathanayakka

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க விரைவில் தீர்க்கமானதொரு அரசியல் முடிவை எடுக்கவுள்ளாரென தெரியவருகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுமீது அவர் ஏற்கனவே கடும் அதிருப்தியில் இருந்தார். அவரை சமாளிப்பதற்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி வழங்கப்பட்டது. அந்த பதவியில் அவர் 30 நாட்கள் மட்டுமே நீடித்தார்.

புதிய அமைச்சரவையில் அவருக்கு இடமளிக்கப்படவில்லை.

தற்போது அரசை அகற்றுவதற்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே எஸ்.பி. திஸாநாயக்க தீர்ககமானதொரு அரசியல் முடிவை எடுக்கவுள்ளார்.

#SRiLankaNews

Exit mobile version