ரஷ்ய விமானத்தடை இடைநிறுத்தம்!

download 1 4

ரஷ்யாவின் Aeroflot விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று, இலங்கையிலிருந்து வௌியேறுவதற்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இன்று (06) இடைநிறுத்தியது.

கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் நகர்த்தல் பத்திரமொன்றை இன்று, முன்வைத்து விடுத்த வேண்டுகோளை கருத்திற்கொண்டு நீதிமன்றம் இந்த தடை உத்தரவினை இடைநிறுத்தியுள்ளது.

ரஷ்ய ஏரோப்ளோட் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றுக்கு இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இவ்விவகாரத்தால் இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் இராஜதந்திர மோதலும் ஏற்பட்டது. இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்துவதற்கு Aeroflot நிறுவனம் தீர்மானித்தது.அத்துடன், இலங்கை தூதுவரை அழைத்து, ரஷ்யா அதிருப்தியையும் வெளியிட்டிருந்தது.

#SriLankaNews

Exit mobile version