4 மாதங்களின் பின் ரஷ்ய விமானம் இலங்கைக்கு

image 8f0d2a9289

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட்(Aeroflot) விமானம் கொழும்புக்கும் மொஸ்கோவிற்கும் இடையில் 4 மாதங்களின் பின் இன்று (10) சேவையை ஆரம்பித்தது..

அரசாங்க அதிகாரிகள், விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் சுற்றுலா அதிகாரசபை அதிகாரிகள், விமான ஊழியர்கள் பயணிகளை வரவேற்க வருகை தந்திருந்தனர்.

அயர்லாந்து நிறுவனத்துடனான வர்த்தக தகராறில் இலங்கை அதிகாரிகள் அதன் Airbus A330 ஜெட் விமானத்தை ஜூன் 4 அன்று தடுத்து வைத்ததை அடுத்து, Aeroflot கொழும்புக்கான அதன் வணிக விமானங்களை நிறுத்தியது. இதன் பின்னர் ரஷ்யா அதிகாரிகளுடன் இலங்கை அரச குழுவினர் நல்லிணக்க பேச்சுவார்த்தையை நடத்திய நிலையில் மீண்டும் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.

விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுவதன் மூலம் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடையும் என ரஷ்ய மாளிகை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மொஸ்கோ, ரஷ்யா மற்றும் கட்டுநாயக்கா ஆகிய நகரங்களுக்கு இடையே 09 மணி நேர நேரடி விமான சேவையை நடத்த உள்ளது.

மேலும், நவம்பர் முதல் மார்ச் வரையிலான குளிர்காலத்தில், இந்த விமானங்கள் வாரத்தில் 03 நாட்கள், அதாவது ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் இதற்கான 75% விமான டிக்கெட்டுகள் தற்போது விற்கப்பட்டுள்ளன.

#SriLankaNews

Exit mobile version