ரஷ்ய விமானத்தால் நாட்டு பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பு! – எச்சரிக்கிறார் சஜித்

sajith 3 1

” ரஷ்யாவுடன் வீண் பிரச்சினை ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் எமது நாட்டு பொருளாதாரத்துக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அரசின் இயலாமையும் வெளிப்பட்டுள்ளது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ரஷ்யாவின் விமானமொன்று, வணிக நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை நான் விமர்சிக்கபோவதில்லை. அதற்கான தார்மீக உரிமையும் எனக்கு கிடையாது.

ஆனால் இப் பிரச்சினை சர்வதேசம்வரை சென்று, இராஜதந்திர நெருக்கடியாக மாறுவதற்கு முன்னர் அதனை தீர்த்திருக்கலாம். ஆனால் தாங்கள்தான் சர்வதேச சாம்பவான்கள் எனக் கூறிக்கொள்பவர்கள், அதனை செய்யவில்லை.

ரஷ்யாவில் இருந்துதான் கூடுதல் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அங்கிருந்து விமானம் வருவது தடைபட்டுள்ளது. தேயிலை ஏற்றுமதியும் அந்நாட்டை தங்கியுள்ளது. எனவே, எமது நாட்டுக்குதான் பிரச்சினை ஏற்படபோகின்றது. ” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version