24 662570ff89a95
இலங்கைசெய்திகள்

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையரின் விபரங்களை வழங்குமாறு வேண்டுகோள்

Share

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையரின் விபரங்களை வழங்குமாறு வேண்டுகோள்

ரஷ்ய இராணுவத்தில் இணைந்து செயற்படும் இலங்கையர்கள் குறித்த விபரங்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கம்(Sri lankan Government) ரஷ்யாவிடம்(Russia) வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

வெளிவிவகார அமைச்சின் அறிவுறுத்தலின் பிரகாரம் ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இது தொடர்பில் எழுத்து மூலக் கோரிக்கையொன்றை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சிடம் கையளித்துள்ளது.

 

குறித்த கடிதத்தில் இலங்கையில் இருந்து ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்ள வருகை தந்துள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் விபரங்கள், மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் விபரங்கள் என்பவற்றை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் இலங்கை இராணுவத்தின் முன்னாள் சிப்பாய்களை ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்று ரஷ்ய – உக்ரைன் மோதலில் ஈடுபடுத்தும் மோசடி செயற்பாடுகள் தொடர்பில் தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ரஷ்யாவிடம் மேற்குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...