ரம்புக்கனை
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரம்புக்கனையில் பொலிஸார் வெறியாட்டம்! – ஒருவர் சாவு- 24 பேர் காயம் – நால்வர் கவலைக்கிடம்

Share

கேகாலை மாவட்டம், ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், பொலிஸார் உட்பட காயமடைந்த மேலும் 24 பேர் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மக்களின் கல்வீச்சுத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் 8 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த 24 பேரில் நால்வர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் இன்று காலை முதல் மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மார்க்கத்துக்கும் தடை ஏற்படுத்தப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் முற்றாக ஸ்தம்பித்தன. எரிபொருள் பவுசர் ஒன்றையும் மக்கள் தடுத்து நிறுத்தினர்.

20220419 191703

போராட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினர். எனினும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. பதிலுக்குப் போராட்டக்காரர்களும் கல்வீச்சுத் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ரம்புக்கனைப் பகுதி போர்க்களமாக மாறியது.

இதன்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டனர். இதில் ஒருவர் பலியாகினார். காயமடைந்த 16 பேர் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். உயிரிழந்தவர் துப்பாக்கிச்சூட்டால் ஏற்பட்ட காயத்தால்தான் பலியாகினார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

“போராட்டக்காரர்களால் ஓட்டோவொன்று கொளுத்தப்பட்டது. சொத்துகளுக்கும் தேசம் விளைவிக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் பொலிஸார் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர். இதனால் 8 பொலிஸாரும் காயமடைந்தனர்” – என்றார்.

இந்நிலையில், ரம்புக்கனைப் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

278630439 4966471090132338 5825020854574240018 n

278843087 4966471100132337 4668273744147016337 n

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 696674a2371e4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணிப்பெண்ணை நிர்வாணமாக்கி காணொளி வெளியிட்ட வர்த்தகர் கைது: ஹிக்கடுவையில் பதுங்கியிருந்தபோது சிக்கினார்!

சமூக வலைத்தளங்களில் பரவிய பெண்ணொருவரைத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் கொடூரமான காணொளிச் சம்பவம் தொடர்பாக, பிரதான சந்தேக...

earthquake 083711893 16x9 0
செய்திகள்இந்தியா

டெல்லியில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆகப் பதிவு!

இந்தியத் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (19) காலை லேசான நிலநடுக்கம்...

images 1 5
செய்திகள்அரசியல்இலங்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட ஆபத்தானது: புதிய சட்டமூலம் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை!

இலங்கையில் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அல்லது உத்தேச “அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம்”...

wimal weerawansa
செய்திகள்அரசியல்இலங்கை

விமல் வீரவன்ச உள்ளிட்ட அறுவருக்கு எதிரான வழக்கு: கறுவாத்தோட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குத்...