bus 2 scaled
இலங்கைசெய்திகள்

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பஸ் பயணத்தில் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்

Share

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீக்கப்படும் நிலையில் தனியார் பஸ்களில் பயணம் செய்வோர் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

பஸ்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பிலேயே மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் நிலந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி முதல் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

  • தனியார் பஸ்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கொவிட் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றிருத்தல் கட்டாயமாகும்.பஸ் ஊழியர்கள் மற்றும் பயணிகள் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கு பஸ்ஸின் நடத்துநரே பொறுப்பாக வேண்டும்.

  • ஆசன எண்ணிக்கைக்கு அமைய மாத்திரமே பயணிகள் பயணிகளை ஏற்றுத்தல் வேண்டும்.

  • அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிகின்றனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுதல் வேண்டும்.

  • பஸ்களில் யாசகம் பெறுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

  • பஸ்ஸில் வெற்றிலை மெல்லுதல், புகைப்பிடித்தல் போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முழுப் பொறுப்பும் நடத்துநரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தப் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கு பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதகர்கள் நாடு முழுவதும் சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து பஸ்களும் சுகாதார அறிவுறுத்தல்களை முறையாக நடைமுறைப்படுத்தி போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...