இலங்கைசெய்திகள்

ஊழலுக்கு எதிராக மக்கள் படை திரட்டுகின்றார் ரொஷான் எம்.பி

Share
tamilnib 5 scaled
Share

அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, ஊழலுக்கு எதிராக மக்கள் இயக்கமொன்றைக் கட்டியெழுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.

இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன எனவும், ஜனவரியில் அமைப்பு உதயமாகவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டில் ஊழல் தலைவிரித்தாடுகின்றது எனச் சுட்டிக்காட்டி, அதிரடியான சில நடவடிக்கைகளை விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க முன்னெடுத்தார்.

அவரின் நடவடிக்கைகளால் ஆளுந்தரப்புக்கும், அவருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சுப் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே புதியதொரு அரசியல் பயணத்தை அவர் ஆரம்பிக்கவுள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...