காலி பிரதான பேருந்துத் தரிப்பிடத்துக்கு அருகில் உள்ள சதொச வர்த்தக நிலையத்திற்குள், இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்கள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை நேற்று இரவு கொள்ளையிட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ள போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதொச வர்த்தக நிலையத்தின் கண்ணாடியை உடைத்து, சந்தேகநபர்கள் உள்ளே நுழைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
#SrilankaNews
Leave a comment