24 663eb8aad8d5b
இலங்கைசெய்திகள்

கொழும்பு நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை

Share

கொழும்பு நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை

கொழும்பு – ஹோமாகமை(Homagama) நகரில் உள்ள நகைகடை ஒன்றில் துப்பாக்கி முனையில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் நேற்று(10) இடம்பெற்றுள்ளது.

ஹோமாகம நகரத்தில் உள்ள நகைக் கடையொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வர் அங்கிருந்த பணியாளர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி 3 இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, நகைக் கடையிலிருந்த 36 மோதிரங்களும் 8 பெண்டன்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சந்தேகநபர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள்களில் போலி இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...

குருவிட்ட
இலங்கை

குருவிட்ட, பல்லன்சேன சிறைச்சாலைகளின் அமைதியின்மை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள்.

இன்றைய தினம் குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேன திறந்தவெளி சிறை முகாமில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து...

death body 1
இலங்கை

மெகசின் சிறைச்சாலையில் உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித்தகவல்கள்.

நேற்றைய தினம் இரவு, கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த கைதி...

Chemmani Mass Graves
இலங்கை

தினந்தோறும் கிடைக்கப்பெறும் என்புக்கூடுகள் – அதிகரிக்கும் பதற்றம்.

100 நாட்களாக, செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரையில் 507...