கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அத்துடன், வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சையளிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் ஒட்சீசன் தேவைப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
எனவே, பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும் எனவும், கூடிய விரைவில் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment