அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு அரிசி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், பேரணி ஆரம்பிப்பதற்கு முன்னர் 40 அடி அரிசி கொள்கலன்கள் கொழும்பில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்ததாக அவர் கூறினார்.
அட்டமஸ்தான யாத்திரைக்கு செல்லுமாறு ஏமாற்றி மற்றொரு குழுவை அழைத்து வந்துள்ளதாகவும், இவ்வாறான விளையாட்டினால் நாட்டில் எழுச்சிகளை தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment