ராஜபக்சக்களால் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பணம், மீள திறைசேரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதற்கான முடிவை ஜனாதிபதி எடுக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் மத்தியில் நாளாந்தம் எதிர்ப்பலை அதிகரித்துவருகின்றது. எனவே, மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைகளை ஜனாதிபதி முழுமையாக ஏற்று செயப்பட வேண்டும்.
ராஜபக்ச குடும்பத்தினர் பணத்தை கொள்ளையடித்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது. அந்த பணத்தை மீளப்பெற்று, திறைசேரிக்கு வழங்குமாறு கோருகின்றோம். இது விடயத்தில் அண்ணன், தம்பி, மகன் என பார்க்க வேண்டாம், நாடு குறித்து சிந்தித்து இந்த முடிவை எடுங்கள்.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment