சுகாதார ஒழுங்கு விதிகளுக்கமைய இன்னும் இரு வாரங்களின் பின் 200 க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைத் திறக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நாட்டில் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 5 ஆயிரம் பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி முதலில் பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புக்களை மட்டும் கொண்ட பாடசாலைகள் திறக்கப்பட்டவுள்ளன.
தற்போது கல்வித்துறை சார் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில். இதுவரை தடுப்பூசி செலுத்தாத பாடசாலை போக்குவரத்து சேவை ஊழியர்கள் விரைவில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை 15 வயதுக்கு மேற்பட்ட க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு அடுத்த மாத முற்பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment