பால் பண்ணைகளை உருவாக்கத் தீர்மானம்
வர்த்தக ரீதியான பால்பண்ணைகளை மிகப்பெருமளவில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேசிய கால்நடைகள் அபிவிருத்தி சபை மற்றும் அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபை என்பனவற்றுக்கு சொந்தமான காணிகளை 5 தனியாருக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்க அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கின்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பண்ணைகளில் தற்போது பயன்படுத்தாத காணிகள் மற்றும் பயன்பாட்டுக்கு உட்படுத்தாத ஏனைய அரச காணிகளை நவீன பால் பண்ணைகளாக அபிவிருத்திசெய்து வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
அத்துடன், இதற்காக 4 ஆயிரத்து 200 பால் பசுக்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment