7 50
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவின் திட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்பு! அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Share

கோட்டாபயவின் திட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்பு! அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

இந்த அரசாங்கமும் பேச்சளவில் திட்டங்களை குறிப்பிடுகிறதே தவிர, நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டங்களையும் முன்வைக்கவில்லை என விவசாய ஒருங்கிணைப்பு சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,”முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிமுகப்படுத்திய சேதன பசளைத் திட்டத்தாலும், இயற்கை அனர்த்தங்களாலும் விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள்.

இந்த அரசாங்கமும் பேச்சளவில் திட்டங்களை குறிப்பிடுகிறதே தவிர, நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டங்களையும் முன்வைக்கவில்லை. பொருளாதார நெருக்கடியினாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அரசாங்கம் குறிப்பிட்டதை போன்று நிவாரணம் முறையாக கிடைக்கப் பெறவில்லை. ஆகவே ஒரு கிலோகிராம் நெல்லுக்கான உத்தரவாத விலையை 140 ரூபாவாக நிர்ணயிக்க வேண்டும்.

பெரும்போக விவசாய விளைச்சல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படவில்லை. இறுதி கட்டத்தில் மிகவும் குறைந்த அளவில் விலை நிர்ணயிக்கப்படும்.

அச்சந்தர்ப்பத்தில் மாற்று வழியேதும் இல்லாத காரணத்தால் விவசாயிகள் குறைந்த விலைக்கு நெல்லை விநியோகிக்க நேரிடும்.

மறுபுறம் பிரதான அரிசி உற்பத்தியாளர்களின் மாபியாக்களுக்கும் விவசாயிகள் அகப்பட வேண்டிய நிலை ஏற்படும். அறுவடையின் பெரும்பாலான பங்கை பிரதான வர்த்தகர்கள் கொள்வனவு செய்து அரிசியின் விலையை அவர்கள் தீர்மானிப்பார்கள்.

இதனால் சந்தையில் அரிசி விலை உயர்வடையும், நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள். இவையனைத்தையும் அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்.

விவசாயிகளிடமிருந்து நெல்லை நேரடியாக கொள்வனவு செய்வதற்கும், சிறந்த உத்தரவாத விலையை தீர்மானிப்பதற்கும் இதுவரையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...