யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள முப்பெரும் தமிழ் விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தியாவில் இருந்து தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரதிநிதிகள் வருகைதந்தனர்.
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக நேற்று நண்பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
இதன்போது வருகைதந்தவர்களுக்கு மாலை அணிவித்து பூங்கொத்து வழங்கி யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக் கலைக்கூடம் அமைப்பினரால் வரவேற்பளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக் கலைக்கூடம் உலக பண்பாட்டுத் தினத்தினை முன்னிட்டுமுப்பெருந்தமிழ்விழாவை நடாத்தவுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை(21)யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் பிற்பகல் 2.30மணி யாழ் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.


#srilankaNews
Leave a comment