கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விமானங்களில் இலங்கைக்கு வருகை தரும் அதிகபட்ச பயணிகள் தொடர்பான கட்டுப்பாட்டை உடன் நடைமுறைப்படுத்தும் வகையில் நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொரோனாப் பரவல் காரணமாக ஆரம்பத்தில் கட்டுநாயக்க வரும் விமானங்களில் பயணிக்கக் கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதனால் விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் ஏனைய பயணிகளுக்கும் இலங்கை வர எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a comment