பத்தாயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப்பொதி!
கொரோனாத் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களில், குறைந்தளவு வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் உணவுப்பொதி வழங்கப்படவுள்ளது.
இதன்படி, பத்தாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருள்களடங்கிய பொதியை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment