கடந்த காலங்களில் எழுந்த பல்வேறு பொதுவான காரணங்களினால் பாடசாலைக்கு வருவதில் சிரமங்களை எதிர்நோக்கும் உயர்தர மாணவர்களுக்காக சில நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு முதல் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை கட்டாயம் என கல்வி அமைச்சு நேற்று (28) விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், 2022 உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு 80% வருகை உறுதிப்படுத்தல் கட்டாயமில்லை எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சருக்கு தெரியப்படுத்தியதன் பின்னர் ஏதாவது சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
#SriLankaNews

