இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.2,000 அதிகரித்து 378,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,800 ரூபாயாக, விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

