மாகாணசபைத் தேர்தலைக் குறிவைத்தே நிவாரணம்- ஐ.ம.ச

Marikkar

எதிர்வரும் ஏப்ரலில் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் நோக்கிலேயே ‘5000’ ரூபா நிவாரணத்தை அரசு வழங்கியுள்ளது – என ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

அரச வருமானம் அதிகரிக்கப்படாத நிலையில், பணத்தை அச்சிட்டு இவ்வாறு நிவாரணம் வழங்குவது பொருளாதார அழிவுக்கே வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணத்தை இவ்வாறு அச்சிடுவதால் பணவீக்கம் ஏற்பட்டு, அது பொருளாதாரத்தில் மேலும் பல தாக்கங்களை ஏற்படுத்தும். எனவே, வருமானத்தை அதிகரித்துக்கொள்ளும் வழிமுறைகளை அரசு கண்டறியவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டி கருத்து வெளியிட்டார்.

#SrilankaNews

Exit mobile version