ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிக்குக: மனோ கணேசன்

Manoganeshan

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு முழுமையான பொதுமன்னிப்பை வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள அவரை இன்று சந்தித்து சுகநலம் விசாரித்த பிறகு, ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மனோ கணேசன் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ரஞ்சன் ராமநாயக்கவை சந்திப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவருடன் நானும் இங்கு வந்தேன். எதிர்க்கட்சித் தலைவர் கூறியதுபோல ரஞ்சன் ராமநாயக்க சிறையில் இருக்க வேண்டிய நபர் அல்லர், எனவே, மனித நேயத்தின் அடிப்படையில் அவருக்கு முழுமையான பொதுமன்னிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

கொலை செய்துவிட்டோ, கொள்ளை அடித்துவிட்டோ, குற்றங்கள் புரிந்துவிட்டோ அவர் சிறைக்குச்செல்லவில்லை. மக்களின் உரிமைகளுக்காக துணிந்து கதைக்கக்கூடியவர். அவ்வாறு கதைக்கும்போது சொற் பிரயோகங்களில் பிழை ஏற்படலாம். அவ்வாறானதொரு விடயத்துக்காகவே சிறை தண்டனை அனுபவிக்கின்றார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குமாறு நீதிமன்ற தரப்பில் உள்ளவர்களிடமும் இரு கரம்கூப்பி கேட்டுக்கொள்கின்றேன். வழக்கின் பிரதான தரப்பு அவர்கள்தான்.

எனவே, அவர்கள் மன்னிப்பு வழங்கினால், ஜனாதிபதியால் அதற்கு செயல் வடிவம் கொடுக்க முடியும்.” – என்றார்.

#SrilankaNews

Exit mobile version