photo
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியீடு!

Share

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான ‘உறுப்புரை 4’ ஆலோசனை மற்றும் பணிக்குழாம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன் நிறைவேற்று அதிகாரியின் இலங்கை தொடர்பான அறிவித்தலும் இந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில், நம்பகமான, தெளிவான மூலோபாயங்களை இலங்கை அரசு அமுலாக்குவது உடனடி அவசியப்படாகும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

பாதிப்புமிக்க குழுக்களைப் பாதுகாத்து, வறுமையைக் குறைப்பதற்கு சமூக பாதுகாப்பு முறைமைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கையின் பொருளாதாரத்துக்குத் தாக்கம் செலுத்தியுள்ள பிரதான விடயம் குறித்து இந்த அறிக்கையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த அறிக்கை கவனம் செலுத்துகின்றது.

கொரோனா பரவல் இலங்கையின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளதுடன், சுற்றுலாத்துறையின் வருமான இழப்பு அதில் பிரதானமாக உள்ளது.

தொற்றுநோய்க்கு முந்தைய வரி குறைப்புகள் மற்றும் கொரோனா தாக்கம் காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் நிதிப் பற்றாக்குறையானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தைக் கடந்தது.

கடந்த ஆண்டு, அரச கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில நூற்றுக்கு 119 சதவீதமாக உயர்ந்ததுடன், சர்வதேச மூலதனச் சந்தைகளுக்கான அணுகல் இல்லாமல்போனது.

வெளிநாட்டு கடன் தீர்ப்பனவுகள் மற்றும் நடைமுறைக் கணக்கு நிலுவை விரிவாக்கம் காரணமாக அந்நிய செலாவணி பற்றாக்குறை உருவாகியுள்ளது.

இலங்கையானது, கொடுப்பனவு சமநிலை மற்றும் இறையாண்மைக் கடன் நெருக்கடியை அனுபவிக்கத் தொடங்கியதுடன், வெளிநாட்டு இருப்புக்கள், கடனைச் செலுத்துவதற்குப் போதுமானதாக இன்மையால், அரச கடன் சுமை அதிகரித்தது.

பரிமாற்ற கையிருப்பைக் கட்டியெழுப்புவதற்கு அதிகாரிகள் குறுகிய கால நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இந்த வருடத்திற்கு அப்பால் இலங்கையால் எவ்வாறு பாரிய கடன் சேவையை பேண முடியும் என்பது தெளிவற்றதாகும்.

இந்தச் சூழலில் நிதி ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவது, வருமான வளர்ச்சியின் அடிப்படையில் அமைய வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

வட் எனப்படும் பெறுமதி சேர் வரி மற்றும் வருமான வரி விகிதங்களை அதிகரித்தல் மற்றும் விரிவாக்கல் நடவடிக்கைகள் மூலம் சீர்திருத்தங்கள் செயற்படுத்தப்பட வேண்டும்.

நிதி அபாயத்தைக் குறைக்கும் வகையில், வலுசக்தி விலை நிர்ணயம் சீராக்கப்பட வேண்டும் என்பதுடன், நட்டத்தில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மீள்கட்டமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrest 13
இலங்கை

இலகுவாக வீடு கட்டிக்கொள்ளலாம் – தவணைமுறையில் பணம் பெற்று பலரிடம் மோசடி செய்த நபர் கைது.

வீடு கட்டித் தருவதாகக் கூறி சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு நபர்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி...

எல் நினோ
இலங்கை

2027 ஏப்ரல் வரை நீடிக்கவுள்ள எல் நினோ தாக்கம்!

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின்...

சமிந்த குலரத்ன
இலங்கை

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில்...

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது.

நேற்று இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த...