எரிபொருளுக்காக நிதியை விடுவிக்குக- கோரும் ஆனந்த பாலித

Anantha Palitha

எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு நிதியை விடுவிக்க வேண்டும். இதற்காக இலங்கை மத்திய வங்கிக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

நாடு பாரிய மின்வெட்டுக்கு முகம்கொடுக்கும். எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் கருத்துக்கள் எவ்வாறாயினும், நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக 300-900 மெகாவோட் மின்சாரம் மாத்திரமே எரிபொருள் வழங்கல் இன்றி உற்பத்தி செய்ய முடியும்.

தற்போது துறைமுகத்தில் உள்ள எரிபொருள் கப்பல்கள் தொடர்பில் அமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கப்பல்கள் விடுவிக்கப்படவில்லை எனில், மின்சார சபை, தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்களுக்கு எரிபொருள் கிடைக்காது.

இந்த நிலை தொடர்ந்தால் ரயில் சேவையும் பாதிக்கப்படும் என்றும் தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித கோரிக்கை விடுத்துள்ளார்.

#SrilankaNewws

Exit mobile version