அலரி மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் குழுவினரை அப்புறப்படுத்தல் தொடர்பாகப் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் குழுவினரை அப்புறப்படுத்துமாறு கோரி கொள்ளுப்பிட்டிப் பொலிஸாரால் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் அறிக்கையொன்று முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், இதனை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷண கெகுணவல, இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
#SriLankaNews

