அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அறியவருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் அரச உழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டது.
எனினும், தற்பொழுது 55 வயதில் தங்களுடைய சுய விருப்பத்திற்கு அமைய ஓய்வு பெறமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டது. தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் அரச ஊழியர்களுக்குசம்பளம் வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 3 வருடங்களாக குறைந்து 62 ஆக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment