மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா கடலில் குளிக்கச்சென்ற 15 வயதான இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஏறாவூர் தைக்கா வீதியைச் சேர்ந்த – ரமீஸ் சஜாத் என்பவரே தனது ஐந்து நண்பர்களுடன் கடலில் குளித்தபோது இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a comment