திருவம்பாவை பாராயணம் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜாவின் வழிகாட்டலில் மூன்றாம் வருட கலைப்பீட மாணவர்களினால் திருவம்பாவை பாராயணம் தொடர்ந்து இரண்டாவது வருடமாக இம்முறை மாணவர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரா முன்றலில் அதிகாலை வேளையில் ஆரம்பமாகும் பாராயணம் பாலசிங்கம் விடுதியை அடைந்து பின்னர் தபால் பெட்டிச் சந்தியூடாக பரமேஸ்வரா சந்தியை அடைந்து பல்கலைக்கழக பரமேஸ்வரா கோயில் முன்றலில் நிறைவடையும்.

IMG 20211211 WA0005

இதன்போது குறிப்பிட்ட விதிகளில் காணப்படுகின்ற கோவில்களிலும் மாணவர்களினால் பாராயணம் முன்னெடுக்கப்படுகின்றது.

இக்காலகட்டத்தில் ஆன்மீக ரீதியாக மாணவர்களின் செயற்பாடுகள் குறைந்துள்ள நிலையில் கிடைப்பவர்கள் முன்மாதிரியாக இந்த செயற்பாட்டை ஆரம்பித்துள்ளார்கள்.

மேலும் ஏனைய பீட , வருட மாணவர்களையும் ஆன்மீக செயற்பாட்டில் கலந்து கொள்ளுமாறு மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

#SrilankaNews

Exit mobile version