பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் என சீனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன்,
தற்போதைய சிரமங்கள் மற்றும் கடன் சுமையை குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையின் பதிலளிப்புக்கு தொடர்ந்தும் சாதகமான பங்களிப்பை வழங்குவதற்கு தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற சீனா தயார் நிலையில் உள்ளது.
இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்கள் தொடர்பில் சீனா உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.
#SriLankaNews