தொலைபேசி அழைப்பை எடுத்து ஹலோ மச்சான் ட்ரம்ப் என்று யாருக்காவது கதைக்க முடியுமா, அப்படி யாராது இருக்கிறார்களா? முடியாத விடயம் என நினைக்கிறேன் என்று முன்னாள் வெளிநாட்டு விவகாரங்களை கையாளும் மூத்த அதிகாரி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விதிக்கப்பட்ட வரியை குறைக்கலாம் என நாம் ஊகிக்க தான் முடியும். அதை நடைமுறைப்படுத்துவதில் தேக்க நிலை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புவிசார் அரசியல் மற்றும் சர்வதேச பொருளாதாரம் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ட்ரம்பின் வரி கொள்கையை சரிப்படுத்தவோ மீளமைக்கவோ தேவையான உத்திகளை கையாள்வதில் இன்று தேக்கநிலை தோன்றியுள்ளது.
இது தொடர்பில் அரசாங்கம் முழுமையாக செயற்படுவதாகவே தெரிகிறது. ஆனாலும் நாம் வரி குறைப்பில் பின்வாங்கக் கூடாது. அத்தோடு சிறு தடங்கல்கள் இருக்கின்றன. தேக்க நிலை இருந்தாலும் நாம் ஒரு கொள்கையோடு முன்வைக்கும் உத்திகள் ஏற்றுக்கொள்ளப்படலாம்.
இலங்கையின் வெளிநாட்டு கொள்ளையில் ஒரு பக்கம் சார்வது தவிர்க்கப்பட வேண்டும். பக்கம் சார்வது தொடர்பில் கதைக்க கூடாது. ஒரு புறம் சீனா எதாவது ஒன்று கேட்கலாம்.
அத்தோடு இந்தியா மற்றும் அமெரிக்காவும் கேட்கலாம். ஆதலால் முதலில் கொள்கையை உருவாக்க வேண்டும். மூன்று நாடுகளும் இலங்கையை விரும்புவதென்றால் எவ்வளவு பெரிய விடயமாகும் என குறிப்பிட்டுள்ளார்.