tamilni 391 scaled
இலங்கைசெய்திகள்

எந்தவித தடைகள் வந்தாலும் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்படும்

Share

எந்தவித தடைகள் வந்தாலும் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்படும்\

எந்தவித தடைகள் வந்தாலும் எதிர்வரும் மாவீரர்மாவீரர் நாள் தடை வாபஸ்! தினத்தன்று (27) உறவுகள் இறந்த நாளினை நினைவு கூருவோம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் முல்லைத்தீவு பொலிஸாரால் தடையுத்தரவை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கொடிகளை அகற்றுமாறும், அலங்கார வேலைகள் இருக்க கூடாதென்றும், பாடல்கள் ஒலிபரப்பக்கூடாது என விரட்டியதாக எனக்கு தகவல் தெரிவித்திருந்தார்கள்.

இதேபோல் தேவிபுரம், முள்ளிவாய்க்கால், அளம்பில், முள்ளியவளை போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்தும் இவ்வாறாக இடம்பெற்றிருந்ததாக அறியத்தந்திருந்தார்கள்.

இருப்பினும் மக்கள் சில விடயங்களை கதைத்து முடிவு எடுத்திருக்கின்றார்கள். அளம்பில் துயிலும் இல்லத்தில் வைத்து எனக்குரிய தடையுத்தரவை வழங்கியிருக்கிறார்கள்.

எவ்வளவு தடைகள், உத்தரவுகளை தந்தாலும் உறவுகள் இறந்த நாளினை நினைவுகூர்ந்து நடத்துவோம்.

மஞ்சள் , சிவப்பு கொடி என்பது விடுதலைப்புலிகளது கொடி அல்ல. நிதிமன்ற கட்டளைகளை மதிக்கின்றோம். அக்கட்டளைகளை மதித்து நாம் உறவுகளை நினைவு கூருவோம் என்றார்.

Share
தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...