கொழும்பு ரத்மலான விமான நிலையம் 5 தசாப்தங்களுக்குப் பின் மீண்டும் சர்வதேச விமான பயங்களை ஆரம்பிக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி முதல் விமானம் அடுத்த மாதம் மாலைதீவுக்குப் புறப்படும் என இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மாலைதீவு எயார்லைன்ஸூடன் பேச்சுக்களின் பின் அவர்கள் ரத்மலானையிலிருந்து விமானங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
இதில் ஆரம்பத்தில் 50 பயணிகளை மாத்திரம் ஏற்றிச்செல்லக்கூடிய விமானம் மாலைதீவுக்கும் கொழும்புக்கும் இடையே சேவையில் முதலில் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விமான நிலையம் 1938 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. பின் 1968 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதனால் ரத்மலானை விமான நிலைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
ரத்மலான விமான நிலையம் இந்தியா மற்றும் மாலைதீவை மையமாகக் கொண்ட ஒரு பிராந்திய சர்வதேச விமான நிலையாகும்.
இந்த நிலையில் ரத்மலானை விமான நிலையத்தில் விமானங்களை ஊக்குவிக்க தரிப்பிடக் கட்டணத்தை ஒரு வருடத்துக்கு நீக்கவும், பயணிகளிடம் இருந்து விதிக்கப்படும் விமான நிலைய சேவை வரியை நிறுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment