22 14
இலங்கைசெய்திகள்

யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் நூற்றுக்கணக்காணோர் பாதிப்பு : வைத்தியர் கேதீஸ்வரன் தகவல்

Share

யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் நூற்றுக்கணக்காணோர் பாதிப்பு : வைத்தியர் கேதீஸ்வரன் தகவல்

யாழ் (Jaffna) மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) நோய் காரணமாக இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7200 பேருக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் வழங்கப்படுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் (A. Ketheeswaran) தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (18.12.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை. இதுவரை யாழ் மாவட்டத்தில் இந்நோய் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

நேற்றுவரை ஏறத்தாழ 7200 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் காய்ச்சல் நோயாளர்களை இனங்காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இக்கிருமித்தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக கொழும்பிலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து குழு ஒன்று யாழ் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்துள்ளது.

இக்குழு பருத்தித்துறை, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்குச் சென்று கால்நடைகளிலிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு குருதி மாதிரிகளை எடுத்துச்செல்லவுள்ளது

Share
தொடர்புடையது
Missing Persons Nuwara Eliya
இலங்கை

நிலவும் சீரற்ற காலநிலையால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச்...

Displaced
இலங்கை

நுவரெலியாவில் தொடரும் கனமழை – தற்காலிக முகாம்களில் தஞ்சம் கோரிய மக்கள்.

நுவரெலியாவில் சீரற்ற வானிலை காரணமாக, பல தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளதாக...

Ministry of Defence
இலங்கை

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அவசர அறிவித்தல்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தொடர்புடைய அதிகாரிகளுக்கு...

Electricity bills
இலங்கை

மின்சார கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எவ்வித...