முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 4ஆம் திகதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெலிக்கடையிலிருந்து வெளியில் வந்ததும், தனது அன்புக்குரியவர்களை பார்க்க விரும்புவதாக அவரது சமூக வலைதள கணக்கில் பதிவிடப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 4ஆம் திகதி முற்பகல் 11.00 மணிக்கு அவர் வரவேற்கப்படுவார் எனவும் அக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு பல தரப்பினரும் ஜனாதிபதியிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
#SrilankaNews