முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலைசெய்யப்படவுள்ளார்.
பொது மன்னிப்பு வழங்குவதற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்யுமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பதில் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க, சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment