பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நிதி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, நிதி அமைச்சர் பதவிக்காக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், இதுவரை எவரும் தீர்க்கமான ஒரு முடிவை அறிவிக்காமையால், நாட்டில் தற்போது நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நிதி அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.
அதற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சர் பதவியை இன்று ஏற்கவுள்ளார் என்று அறியமுடிகின்றது.
#SriLankaNews
Leave a comment