ranil
அரசியல்இலங்கைசெய்திகள்

இந்தியா வரவேற்பு! – டில்லி பறக்கின்றார் ரணில்

Share

“இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் அடிப்படையில், ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்.”

– இவ்வாறு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இம்மாத இறுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியா செல்லக்கூடும் என அறியமுடிகின்றது.

ரணிலை நேரில் சந்தித்து இதற்கான அழைப்பை இந்தியத் தூதுவர் விடுப்பார் எனத் தெரியவருகின்றது.

இந்தியா செல்லும் ரணில், அங்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுடன் இலங்கை நிலைமை தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...