5 19
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் தலைமையில் கொழும்பில் கூட்டம்!

Share

முன்னாள் ஜனாதிபதி ரணில் தலைமையில் கொழும்பில் கூட்டம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியினரின் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் மற்றும் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் கொழும்பு – பிளவர் வீதியிலுள்ள அலுவலகத்தில் (14.10.2024) இடம்பெறவுள்ளது.

இதன்போது பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரசாரங்களை ஆரம்பித்தல், அதற்கான தொனிப்பொருள் மற்றும் எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் கூட்டத்தில் பங்கேற்குமாறு நாடளாவிய ரீதியிலுள்ள சகல தேர்தல் மாவட்டங்களினதும் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....