tamilni 121 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் வளங்களை ஏப்பமிடும் ரணில்

Share

இலங்கையின் வளங்களை ஏப்பமிடும் ரணில்\

இலங்கையிலுள்ள வளங்களை விற்று ஏப்பமிடும் முயற்சிகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கம் மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கண்டி மற்றும் நுவரெலியாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையங்களை விற்பனை செய்யும் இலங்கை அரசாங்கத்தின் திட்டம் தொடர்பாக நேற்று(08) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே ஒமல்பே சோபித்த தேரர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

நாட்டின் வளங்களை விற்பதன் மூலம் தமது விரும்பங்களை நிறைவேற்றவே இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

மீண்டும் தமக்கு அரசியல் அதிகாரத்தை ருசிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காது என்பது ஜனாதிபதி தலைமையிலான தற்போதுள்ள அரசாங்கத்திற்கு தெளிவாக தெரியும் என ஒமல்பே சோபித்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் அனைத்து வளங்களையும் விற்று, அதன் மூலம் இலாபம் மற்றும் பயன்களை பெறுவது மாத்திரமே அவர்களின் ஒரே நோக்கம் எனவும் அவர் சாடியுள்ளார்.

நுவரெலியா தபால் காரியாலம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும் எனவும் இலங்கையின் வளங்களை நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக மீதப்படுத்தி பாதுகாக்க வேண்டியது என ஒமல்பே சோபித்த தேரர் கூறியுள்ளார்.

இதனையும் விற்று, ஏப்பமிடுவது என்பது, மிகப் பெரிய சாபமிக்க தவறாக அமையும் என கூறியுள்ள அவர், தபால் பணி விலகல் போராட்டத்திற்கான காரணம் என்பது, மிகவும் நியாயமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....